ஐபிஎல் 2024: ஹர்பஜன் சிங் சாதனையை சமன்செய்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய கேப்டன் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா அமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் தடுமாற்றத்துடன் விளையாடிய அபிஷேக் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயாங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவிட்டார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 ரன்கல் என அடுத்தடுத்து நடையை கட்டினர்.
Trending
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதியில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாட் கம்மின்ஸ், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Most Wickets for MI as Captain in Ipl
&mdash (@Shebas_10dulkar) May 6, 2024
11 - Hardik Pandya*
11 - Harbhajan Singh
5 - Shaun Pollock
1 - Kieron Pollard
1 - Rohit Sharma#MIvsSRH
இந்நிஐயில் இப்போட்டியில் மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் எனும் ஹர்பஜன் சிங் சாதனையையும் சமன்செய்துள்ளார். முன்னதாக ஹர்பஜன் சிங் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஹர்திக் பாண்டியா சமன்செய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now