சர்ச்சையான மூன்றாம் நடுவர் தீர்ப்பு; அடுத்த பந்தில் பழி தீர்த்த ஆவேஷ் கான் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹைதராபாதில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இதில் அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின், டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியதுடன், இருவரும ரைசதம் கடந்தும் அசத்தினர். பின் டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Trending
அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 42 ரன்களையும், மறுபக்கம் நிதீஷ் ரெட்டி 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை விளாசி 76 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்த டிராவிஸ் ஹெட் அடிக்க முயன்று தவறவிட்டார். இதனால் பந்து நேரடியாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் தஞ்சமடைந்தது. அப்போது டிராவிஸ் ஹெட் க்ரீஸை விட்டு வெளியேறியதை சூதாரித்த சஞ்சு சாம்சன், உடனடியாக பந்தை ஸ்டம்பை நோக்கி த்ரோ அடித்து மூன்றாம் நடுவரிடம் முறையிட்டார்.
It didn't matter in the end #SRHvRR #TATAIPL #IPLonJioCinema pic.twitter.com/qdui7WrAVu
— JioCinema (@JioCinema) May 2, 2024
இதனையடுத்து ரன் அவுட் குறித்து மூன்றாம் நடுவர் ஆய்வு செய்தபோது, டிராவிஸ் ஹெட் க்ரீஸில் பேட்டை வைப்பதற்கு முன்னதாகவே பந்து ஸ்டம்புகளை தாக்கியது தெளிவாக தெரிந்தது. இதனால் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மூன்றாம் நடுவர் நான் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை அனைவரும் இந்த முடிவிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்காரவும் நான்காம் நடுவரிடம் ஆவேசத்துடன் விவாதித்தார். ஆனாலும் அது எதும் பலனளிக்கவில்லை. இதையடுத்து 58 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மூன்றாம் நடுவரின் தீர்ப்பானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மூன்றாம் நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியது, அதன்பின் அடுத்த பந்திலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்தும் குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now