Advertisement

ஐபிஎல் 2024: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் விளையாடும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 22, 2024 • 12:13 PM
ஐபிஎல் 2024: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன்!
ஐபிஎல் 2024: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன்! (Image Source: Google)
Advertisement

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியனான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல போராடிவரும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு எதிர்கரித்துள்ளது.  இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Trending


சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எம்எஸ் தோனி தலைமையில் களமிறங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அணியின் கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் அவருடன் தோனியும் இருப்பதால் நிச்சயம் அது அணிக்கு உத்வேகமளிக்கும். மேலும் அணியின் முக்கிய வீரர்களான மஹீஷ் தீக்‌ஷனா, டெவான் கான்வே ஆகியோர் காயத்தை சந்தித்துள்ளதால் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இதன் காரணமாக ரச்சின் ரவீந்திரா தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல் ஆகியோரும் இப்போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகிஷ் தீக்ஷனா.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீதான எதிர்பார்ப்புகளும் இன்றைய போட்டியில் உள்ளது. காரணம் விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் போன்ற வீரர்கள் இருப்பதால் அந்த அணியும் வலிமை மிக்க அணியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியின் பந்துவீச்சு தான் அந்த அணிக்கும் மிகப்பெரும் எமாற்றத்தை கொடுப்பதாக உள்ளது. காரணம் அணியில் உள்ள வீரர்களில் முகமது சிராஜ், லோக்கி ஃபர்குசனை தவிர்த்து பெரிதளவில் வீரர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனையை ஆர்சிபி அணி எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆர்சிபி அணி பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர், விஜய்குமார், லோக்கி ஃபர்குசன், முகமது சிராஜ், கர்ன் ஷர்மா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement