
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியானது மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸுடன் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
IPL 2024 schedule for the first 21 matches IS OUT! #IPL2024 #CSKvRCB #ChennaiSuperKings #RCB #MSDhoni #ViratKohli pic.twitter.com/1dNNQCzORm
— CRICKETNMORE (@cricketnmore) February 22, 2024