அறிமுக போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்த ஜேக் ஃபிரெசர்!
கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இங்கு நான் கொஞ்சம் வித்தியாசத்தை உணர்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த லக்னோ அணியானது ஆயூஷ் பதோனியின் அரைசதம் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
Trending
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிடதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டிக்கு பின் அதிரடியாக விளையாடிய அறிமுக வீரர் ஜேக் ஃபிரெசர் பேசுகையில், “கடந்த 5 - 6 போட்டிகளாக எனக்கு அணியில் இடம் கிடைக்கைவில்லை. இதனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். அதற்கேற்றவாரே இப்போட்டியில் நான் எந்த பந்துகளை அடிக்க வேண்டும் என்பதனை தேர்வு செய்து விளையாடினே. கடந்த 12 மாதங்களாக இதையேதான் செய்ய முயற்சித்து வருகிறேன்.
கவர்ஸ் திசைக்கு மேலே அடித்த ஷாட் எனக்கு பிடித்தது. ஆஃப் சைடுக்கு மேலே அடிப்பதை விட சிறந்த ஷாட் எதுவுமில்லை. பவர் பிளேவுக்கு வெளியே பேட்டிங் செய்ய தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். இந்தியாவில் இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இங்கு நான் கொஞ்சம் வித்தியாசத்தை உணர்கிறேன். இதைப்போல் எங்கும் பார்த்ததில்லை. இதற்கு முன் கேள்விப்பட்ட நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now