Advertisement

ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்; சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்; சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்; சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 10, 2024 • 09:23 PM

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 10, 2024 • 09:23 PM

இருவரும் இணைந்து தொடர்ச்சியாக பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் அரைசதம் கடக்க, கேப்டன் ஷுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களுக்கு மேல் தாண்டியது. அதன்பிறகும் அதிரடியைக் கைவிடாத இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். ஒரு கட்டத்திற்கு மேல் சிஸ்கே பந்துவீச்சாளர்கள் இந்த இணையை பிரிக்க முடியாமல் என்ன செய்வதேன புரியாமல் நின்றனர்.

Trending

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளில் சதமடித்ததுடன், ஐபிஎல் தொடரில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவரைத்தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்ஷனும் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 210 ரன்களைத் தாண்டியது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்ஷன் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 103 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஷிவம் தூபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 104 ரன்கள் எடுத்த நிலையில் ஷுப்மன் கில்லும் அதே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஷாருக் கானும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பறினார். இதனையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement