ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளன.
Trending
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றும் காணும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது. அணியின் பேட்டிங்கில் ஷுபம்ன் கில், விருத்திமான் சஹா, சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், விஜய் சங்கர் போன்ற வீரர்கள் இருந்தாலும், அவர் இதுவரை பெரிதளவில் சோபிக்க தவறிவருவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் நூர் அஹ்மத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அவருடன் மோஹித் சர்மா தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இவர்களுடன் ரஷித் கான், உமேஷ் யாதவ், அஸ்ஹ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரும் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: ஷுப்மான் கில் (கே), விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், உமேஷ் யாதவ், நூர் அகமது, மோஹித் சர்மா, தர்ஷன் நல்கண்டே.
பஞ்சாப் கிங்ஸ்
மறுபக்கம் ஷிகர் தவான் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் போட்டியில் சிறப்பான வெற்றியையைப் பதிவுசெய்திருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். கடந்த போட்டியில் அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் சாம் கரண், அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் காகிசோ ரபாடா, ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்களது ஃபார்மிற்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை ஈட்டும். ஏற்கெனெவே அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ள அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now