இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது - ஷிகர் தவான்!
இது புதிய மைதானம் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகல் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், “இப்போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி. மேலும் நீண்ட நாள்களுக்கு பிறகு நான் கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் நான் இவ்வளவு பதற்றம் நிறைந்த போட்டியில் விளையாடிதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். மேலும் அச்சயமத்தில் நான் பேட்டிங் செல்லவேண்டி இருந்ததால் அப்போது நான் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
Trending
மேலும் பந்துவீச்சாளர்களுக்கு அவர்களுக்கான நேரம் தேவை என்பதால் நாளை இதுகுறித்து ஆலோசித்து, சிறப்பாக செயல்படுவதற்கான வழியை தேடலாம் என்று எண்ணினேன். ஏனெனில் நாங்கள் பந்துவீச்சில் கூடுதல் ரன்களைக் கொடுத்துவிட்டோம். இது சீசனின் முதல் போட்டி என்பதால் சில தவறுகள் நடக்கும். அதனால் அதுகுறித்து அதிகளவில் சிந்திக்க தேவைவில்லை. மேலும் நேரம் செல்ல செல்ல மைதானத்தில் பேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கிடைத்தது.
அதிலும் குறிப்பாக சாம் கரண் அபாரமான இன்னிங்ஸை விளையாடினார். அதேபோல் லியாம் லிவிங்ஸ்டோன் ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். மேலும் இது புதிய மைதானம் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது. அதனால் நாங்கள் மைதானத்தின் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. அதன் காரணமாக நாங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் இங்கு பயிற்சிகளை மேற்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now