4,6,4,4,6: அனுகுல் ராய் பந்துவீச்சை சிதறடித்த ஜானி பேர்ஸ்டோவ் - வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டர் ஜானி பேர்ஸ்டோவ் ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்த காணொளி வைரலாகியுள்ளது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் - சால்ட் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டனர். இதில் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. அதன்பின் சுனில் நரேன் 71 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பிலிப் சால்ட் 75 ரன்னில் வெளியேறினார்.
Trending
அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் - ரஸல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரஸல் 24 ரன்கள் ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Jonny#KKRvPBKS #TATAIPL #IPLonJioCinema #IPLinBhojpuri pic.twitter.com/27f1r4563W
— JioCinema (@JioCinema) April 26, 2024
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்ஷிம்ரன் சிங் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 6 ஓவர்களிலேயே 93 ரன்களைக் குவித்து அசத்தியது. இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் 6ஆவது ஓவரை கேகேஆர் அணி தரப்பில் அனுகுல் ராய் வீச, அந்த ஓவரை பஞ்சாப் அணி தரப்பில் ஜானி பேர்ஸ்டோவ் எதிர்கொண்டார்.
அதுவரை பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய ஜானி பேர்ஸ்டோவ், அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்ஸருக்கும் விளாசினார். அதன்பின் அடுதடுத்த பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய நிலையில், 5ஆவது பந்திலும் சிக்ஸரை பறக்கவிட்டார். இதன்மூலம் அந்த ஓவரில் மட்டுமே 24 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now