தோனியால் இன்னும் சில வருடங்கள் விளையாட முடியும் - மைக்கேல் ஹஸி நம்பிக்கை!
என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம் என்று சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக தகழ்பவர் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்த மகேந்திர சிங் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியதுடன், ருதுராஜ் கெய்க்வாட்டை புதிய கேப்டனாக அறிவித்தார். இதன் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்ற கருத்துக்கள் வெளியாகின.
மேலும் எஸ் எஸ் தோனி கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு பிறகு கூட தனது கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டியானது சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியும் அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்களும் தோனியின் கடைசி உரைக்காக காத்துள்ளனர்.
Trending
அதேசமயம் சமீப காலமாக கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கூட கடைசி ஒருசில ஓவர்கள் இருக்கும் போது மட்டுமே களமிறங்கி வருகிறார். அதிலும் அவர் ரன்களுக்காக ஓடாமல் பவுண்டரிகளை மட்டுமே அடித்து வந்துள்ளார். இதனால் நிச்சயம் தோனி இந்த சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில் தோனியால் மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் விளையாட முடியும் என அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம். அவர் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். போட்டிக்கு நன்றாக தயார் ஆகிறார். சிஎஸ்கேவின் பயிற்சி முகாமில் முன்னதாகவே இணைந்து தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவருக்கு முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே அவர் காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், முடிவு அவரிடம் தான் உள்ளது. அவர்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். மேலும் அவர் தனது ஓய்வு முடிவை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைக்க விரும்புகிறார். எனவே அவரிடம் இருந்து விரைவில் ஒரு முடிவை எதிர்பார்க்க மாட்டேன்.
ஏனெனில் அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இனி நான் கேப்டன்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்தார். தொடக்கத்தில் எங்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் தற்சமயம் அது அனைத்தும் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now