Advertisement

ஐபிஎல் 2024: காயத்தால் அவதிப்படும் மொஹ்சின் கான்; லக்னோ அணிக்கு பின்னடைவு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 06, 2024 • 20:28 PM
ஐபிஎல் 2024: காயத்தால் அவதிப்படும் மொஹ்சின் கான்; லக்னோ அணிக்கு பின்னடைவு!
ஐபிஎல் 2024: காயத்தால் அவதிப்படும் மொஹ்சின் கான்; லக்னோ அணிக்கு பின்னடைவு! (Image Source: Google)
Advertisement

 

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.

Trending


இதில் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  அந்தவகையில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இதனால் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மோஹ்சின் கான் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக எங்கள் வேகப்பந்து வீச்சாளர் மோஹ்சின் கான் முதுகுபிடிப்பால் அவதிப்பட்டார். இதுகுறித்து அவர் எங்களிடம் தெரிவித்ததுடன், பயிற்சி ஈடுபடுவதில் அசௌகரியம் இருப்பதாக கூறினார். அவர் பார்ப்பதற்கு உடற்தகுதியுடன் தெரிந்தாலும், நாங்கள் அவருக்கான உதற்தகுதி சோதனையை செய்யவுள்ளோம்.

அந்த சோதனையின் முடிவுகளைப் பொறுத்தே அவரை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாமா என்பது குறித்து முடிவெடுக்க உள்ளோம். மொஹ்சின் கான் எங்கள் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய மோஹ்சின் கான், அப்போட்டியில்  4 ஓவர்களை வீசி 32 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றார். தற்போதுள்ள அணியில் மயங்க் யாதவ், நவீன் உல் ஹக் போன்ற வீரர்கள் இருந்தாலும் மொஹ்சின் கான் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement