ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய பெஹ்ரன்டோர்ஃப்; அணியில் சேர்க்கப்பட்ட லுக் வுட்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக லுக் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்த ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளதால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
Trending
Luke Wood has replaced injured Jason Behrendorff in Mumbai Indians for IPL 2024!#IPL2024 #MumbaiIndians #CricketTwitter #Australia pic.twitter.com/qLjFsZ4j62
— CRICKETNMORE (@cricketnmore) March 18, 2024
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு மாற்றாக இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லூக் வுட் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் லூக் வுட்டை ரூ.50 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் இங்கிலாந்து அணிக்காக 5 டி20, 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி: ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுஷங்கா, ஸ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா, லுக் வுட்.
Win Big, Make Your Cricket Tales Now