ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசம் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் பந்தை எதிர்கொள்ள தடுமாறி வந்தனர். இதில் அதிரடியாக விளையாட முயற்சி செய்துவந்த அபிஷேக் சர்மா 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சந்தீப் சர்மாவின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
Trending
இதன் காரணகாம சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த நிதீஷ் ரெட்டி களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதுவரை நிதானம் காட்டிய டிராவிஸ் ஹெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை ஆவேஷ் கான் கைப்பற்றி அசத்தினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளசெனும் அதிரடி காட்ட, மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரியும், சிக்ஸர்களுமாக விளாசிய நிதீஷ் ரெட்டி 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதீஷ் ரெட்டி 3 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முயிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now