ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் பெரிதளவில் மாற்றங்கள் இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களைச் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Trending
இதன்மூலம் சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரவீந்திர ஜடேஜா இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
Rajasthan Royals are now the only undefeated team in IPL 2024!#CSKvKKR #IPL2024 pic.twitter.com/WXJ4K197i2
— CRICKETNMORE (@cricketnmore) April 8, 2024
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் தொடர்ந்து நான்காம் இடத்தில் நீடித்தி வருகிறது. அதேசமயம் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தொடர்ந்து வருகிறது.
இப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தலா ஒரு புள்ளியுடன் பட்டியலின் கடைசி மூன்று இடங்களில் நீடிக்கின்றன.
Win Big, Make Your Cricket Tales Now