ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஹாட்ரிக் வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் அதிகபட்சமாக 85 ரன்களையும், அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும் சேர்த்தனர்.
பின்னர் 273 ரன்கள் என்ற இலமாய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், அபிஷேக் போரல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ரிஷன் பந்த் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Trending
அதேசமயம் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
KKR At the Top Of the Table!#Cricket #IPL2024 #KKRvDC #DCvKKR pic.twitter.com/bYH9dzLrbw
— CRICKETNMORE (@cricketnmore) April 3, 2024
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக முதல் போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் கேகெஆர் அணி ஹாட்ரிக் வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்சிபி அணி 9ஆம் இடத்தைப் பிடித்திருந்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now