
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதன்படி இப்போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களையும், ஷாபஸ் அஹ்மத் 59 ரன்களைச் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின் 65 ரன்களில் மெக்குர்க் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அபிஷேக் போரல் 42 ரன்களையும், ரிஷப் பந்த் 44 ரன்களையும் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.