ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன், 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்களைச் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தார். இதில் மெக்குர்க் 20, பிரித்வி ஷா 7, அபிஷேக் போரெல் 15, ஷாய் ஹோப் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிஷப் பந்த் 16 ரன்களையும், சுமித் குமார் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்தன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 7 போட்டிகளில், 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளில் ரன் ரேட் அடிப்படையில் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
DC Takes A Big Jump In The Points Table!#IPL2024 #DC #GTvDC #Cricket pic.twitter.com/yVyDwZSyle
— CRICKETNMORE (@cricketnmore) April 17, 2024
இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது விளையாடியுள்ள 7 போட்டிகளில் 6 வெற்றி ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலின் முதலிடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். அதேசமயம் இப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெறும் 2 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now