அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ்; தட்டித்தூக்கிய ராகுல் சஹார்!
தனது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய மார்கஸ் ஸ்டொய்னிஸை, அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாக்கிய ராகுல் சஹாரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விகெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது.
Trending
பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை ராகுல் சஹார் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
, &
— IndianPremierLeague (@IPL) March 30, 2024
Rahul Chahar wins the battle Marcus Stoinis#PBKS get their 3rd wicket
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia #TATAIPL | #LSGvPBKS pic.twitter.com/7whRRGpBxy
அதன்படி, இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை ராகுல் சஹார் வீசினார். அதனை எதிர்கொண்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் மூன்றாவது பந்தை சூதாரித்து ராகுல் சஹார் மேலே தூக்கி வீச, அதனை எதிர்பாராத ஸ்டொய்னிஸ் பந்தை தவறவிட்டார். இதன்மூலம் அந்த பந்தில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இக்காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now