
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. லீக் சுற்றின் முடிவின் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியானது 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு டாஸ் நிகழ்வு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. ஆனால் ஆட்டம் தொடங்கும் முன் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் இப்போட்டி கைவிடப்பட்டது.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தால ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மோதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றியை ஈட்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.