டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த ரிஷப் பந்த் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி வீரர்கள் சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய ஷுப்மன் கில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சஹாவும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் சாய் சுதர்ஷன் மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள டேவிட் மில்லர் இணை மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன.
Trending
இப்போட்டியில் சரியாக பந்தை டைமிங் செய்துவந்த சாய் சுதர்ஷன் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவையில்லாமல் சிங்கிள் எடுக்க முயற்சித்து ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதோ ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த டேவிட் மில்லரும் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர்மற்றும் ஷாருக் கான் ஆகியோரும் அடுத்தடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Commitment
— IndianPremierLeague (@IPL) April 17, 2024
Execution
Athleticism
Delhi Capitals are making the most of the chances with some brilliant fielding#GT are 4 down for 30 in the Powerplay!
Watch the match LIVE on @JioCinema and @starsportsindia #TATAIPL | #GTvDC pic.twitter.com/wlh2FCg3WJ
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 48 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதையடுத்து ஜோடி சேர்ந்துள்ள ராகுல் திவேத்தியா - ரஷித் கான் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இஷாந்த் சர்மா வீசிய இன்னிங்ஸின் 5ஆவது ஓவரில் சாய் சுதர்ஷன் ரன் அவுட்டானது, டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் டைவ் அடித்து டேவிட் மில்லரின் கேட்சை பிடித்த காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now