ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடிக்க இந்த வெற்றியானது அவசியம் என்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில், 8 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்து 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் நீடிப்பதை உறுதி செய்யவும் முனைப்பு காட்டி வருகிறது.
அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் உள்ள நிலையில் ஜோஸ் பட்லர் நாடு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் டாம் கொஹ்லர் காட்மோர் இடம்பெற வாய்ப்புள்ளது பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, சஹால், அஹ்வின் உள்ளிட்டோரும் இருப்பதினால் நிச்சயம் அந்த அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), டாம் கோஹ்லர்-காட்மோர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சுபம் துபே, துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
பஞ்சாப் கிங்ஸ்
சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறவும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்கும் நோக்கிலும் இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் அணியின் நட்சத்திர வீரர்கள் காகிசோ ரபாடா, ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் காயத்திலிருந்து மீளாதது அணிக்கு பெரும் பின்னைவை ஏற்படுத்தி வருகிறது.
அணியின் பேட்டிங்கில் ரைலீ ரூஸோவ், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா உள்ளீட்டார் இருக்கும் பட்சத்திலும் இவர்களிடமிருந்து தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டம் வெளிப்படாதது அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அர்ஷல் படேல் ஆகியோருடன் ராகுல் சஹார், ஹர்ப்ரீத் பிரார் போன்ற வீரர்கள் நம்பிக்கை கொடுத்து வருகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஜானி பேர்ஸ்டோவ் (வாரம்), பிரப்சிம்ரன் சிங், ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், சாம் கரன் (கே), அசுதோஷ் சர்மா, ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வித்வத் கவேரப்பா
Win Big, Make Your Cricket Tales Now