
குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஷுப்மன் கில்லும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது.
அதன்பின்னும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் இப்போட்டியில் 62 ரன்களைக் கடந்த போது ஐபிஎல் தொடரில் தனது 1000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
Sai Sudharsan becomes the fastest Indian to 1000 IPL runs! pic.twitter.com/WHbICrt8V0
— CRICKETNMORE (@cricketnmore) May 10, 2024