முகமது சிராஜிற்கு ஓய்வளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தொடர்ந்து சொதப்பி வரும் முகமது சிராஜிற்கு ஒரு சில போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிக மோசமான தொடராக மாறி வருகிறது. அந்தவகையில் அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெது புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பந்துவீச்சு துறைதான் இருந்து வருகிறது.
எனெனெனில் நேற்றைய போட்டியில் கூட 196 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி நிர்ணயிக்க, அதனை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 15.3 ஓவர்களிலேயே எட்டியது. இதில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இப்போட்டி மட்டுமின்றி இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் ஆர்சிபி அணியின் பந்துவீச்சானது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
Trending
குறிப்பாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திவரும் முகமது சிராஜிக்கு இந்த ஐபிஎல் தொடரானது மறக்க கூடிய ஒரு தொடராக மாறி வருகிறது. ஏனெனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய முகமது சிராஜ், நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பந்துவீச்சில் 10 எக்கனாமி என்ற அடிப்படையில் இதுவரை 229 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதனால் அவரது டி20 உலகக்கோப்பை தொடருக்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து சொதப்பிவரும் முகமது சிராஜிற்கு ஒரு சில போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “"அவர் இந்திய அணிக்காக ஒரு சாம்பியன் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார், ஆர்சிபி அணிக்காக கூட அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இந்த தொடரில் அவர் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என்று நான் உணர்கிறேன்.
ஏனெனில் அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருவதால் அவருக்கு மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் ஓய்வு தேவை. அவர் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கு முன், இந்தியா எந்த தொடரில் விளையாடினாலும் அதில் முகமது சிராஜ் அணியில் ஒரு அங்கமாக இருந்தார். மேலும் அவர் நிறைய ஓவர்கள் வீசுகிறார். அதனால், என்னைப் பொறுத்தவரை, அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொஞ்சம் சோர்வாகத் தெரிகிறார்.
இந்த மாதிரியான ஆட்டத்திற்கு பின் எந்த ஒரு பந்து வீச்சாளரும் அடுத்த நாள் எழுந்து நன்றாக உணருவது கடினம். நானும் இதுபோன்ற சூழ்நிலைகளை வெவ்வேறு வடிவங்களில் கடந்து வந்துள்ளேன். நீங்கள் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும், உங்கள் விளையாட்டைப் பற்றி சிந்தித்து வலைபயிற்சிகளில் தீவிரமாக செயல்பட வேண்டும். சிராஜ் வலுவாக மீண்டும் வருவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now