
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் அஷுதோஷ் சர்மா அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை விரட்டி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் ஒன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அப்போது இன்னிங்ஸின் 18ஆவது ஓவரில் அஷுதோஷ் சர்மா பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தார்.