Advertisement

ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 04, 2024 • 12:25 PM

ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 04, 2024 • 12:25 PM

அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஐபிஎல் குறித்த செய்திகளும் அதிகரித்து வருகிறது. 

Trending

அந்தவகையில் ஐபிஎல் தொடரின் முன்னால் சாம்பியன் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று தங்கள் அணியின் கேப்டன் யார் என்பதை உறுதிசெய்துள்ளனர். கடந்த சீசனில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தலைமையில் களமிறங்கிய அந்த அணியானது தொடரின் முடிவில், விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இதனால் அந்த அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரிக்கத் தொடங்கின. அதன்பின் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை வென்ற கேப்டனான ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸை அந்த அணி ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் நிச்சயம் அவர் தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அப்போதே கணிக்கப்பட்டது. 

அதேசமயம் தென் ஆப்பிரிக்காவின் டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்பை இரண்டவாது முறையாக வழிநடத்திய ஐடன் மார்க்ரம் இத்தொடரிலும் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததால் மீண்டும் அவரே ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதனால் ரசிகர்களும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். 

 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியை பாட் கம்மின்ஸ் வழிநடத்துவார் என்று அந்த அணி அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் இன்று அறிவித்துள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஏனெனில் முன்னதாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியதுடன் சாம்பியன் பட்டதையும் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement