Advertisement

ஐபிஎல் 2024: ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ்!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வநிந்து ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்த வியாஸ்காந்தை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Bharathi Kannan
By Bharathi Kannan April 09, 2024 • 19:36 PM
ஐபிஎல் 2024: ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ்!
ஐபிஎல் 2024: ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.  சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளதுள்ளது. 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Trending


இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, வநிந்து ஹசரங்கா காயமடைந்தாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். முன்னதாக ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் ரூ.1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ஒப்பந்தம் செய்தது. தற்போது ஹசரங்கா தொடரிலிருந்து விலகியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவை பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் வநிந்து ஹசரங்காவிற்கு மாற்று வீரராக இலங்கை அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு எஸ்ஆர்எச் அணி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கை அணிக்காக கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

மேலும் அவர் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்காகவும், வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்காக, ஐஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். அதன்படி இதுவரை 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement