உள்ளூர் கிரிக்கெட்டிலும் நான் இதனையே தான் செய்துவருகிறேன் - ரியான் பராக்!
இந்த வருடம் எனது இலக்கானது பந்தை பார்த்து அடிப்பது மட்டுமே. ஏற்கனவே சொன்னது போல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சரியாக இந்த இடத்தில் தான் பேட்டிங் செய்வேன் என்று ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களிண் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோஹித் சர்மா, நமன் தீர், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியார் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக மூவரது விக்கெட்டையும் வீழ்த்தியது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தான். அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பிய, கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய திலக் வர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Trending
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தொடக்கத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தாலும், ரியான் பராக்கின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரியான் பராக் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்து நடப்பு சீசனில் அதிக ரன்களை அடித்த வீரர்களில் விராட் கோலியுடன் சமநிலையில் உள்ளார்.
இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ரியான் பராக், “என்னிடம் எதுவும் மாறவில்லை. சில விஷயங்களை நான் எளிமைப்படுத்தி விட்டேன். இதற்கு முன் நான் சில விஷயங்கள் குறித்து அதிகமாக சிந்திப்பேன். ஆனால் இந்த வருடம் எனது இலக்கானது பந்தை பார்த்து அடிப்பது மட்டுமே. ஏற்கனவே சொன்னது போல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சரியாக இந்த இடத்தில் தான் பேட்டிங் செய்வேன். அதே போல ஜோஸ் அவுட்டானதும் இப்போது நான் இந்த இடத்தில் பேட்டிங் செய்கிறேன்.
பொதுவாக இந்த இடத்தில் தான் நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். கடந்த 3 -4 வருடங்களாக நான் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரில். அப்போதெல்லாம் இது போன்ற சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் கடினமான பயிற்சிகளை செய்தேன். அதிலும் குறிப்பாக இதுபோன்ற கடினமான சூழ்நிலைக்கு தகுந்தது போல் எனது பயிற்சிகளை செய்து வருகிறேன். எனது அப்பா வீட்டில் இருந்து எல்லாவற்றையும் பார்க்க விரும்புவார். அவர் அனைத்தையும் அலசக்கூடியவர். ஆனால் அம்மா இங்கே என்னுடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now