
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ச் அணி இன்று அறிமுகப்படுத்தியது. அதன்படி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேகேஆர் அணியின் ஜெர்சியில், அந்த அணி இதுவரை ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றதைக் குறிக்கும் வகையில் இலச்சினைக்கு மேல் மூன்று நட்சத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளது.