
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது வருகிற மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் மற்றும் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எதிர்வரும் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறும் என்றும் தனது கணிப்பினைத் தெரிவித்துள்ளார்.