
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் தற்சமயாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் வன்ஷ் பேடி காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வன்ஷ் பேடி சிஎஸ்கே அணிக்காக அறிமுகமார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.
மேலும் அணியின் டீம் ஷீட்டிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இறுதி நேரத்தில் காயத்தை சந்தித்ததன் காரணமாக தீபக் ஹூடா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வன்ஷ் பேடிக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.