‘விரைவில் திரும்பி வருவேன்’ - சிஎஸ்கேவிற்கு நன்றி தெரிவித்த டெவால்ட் பிரீவிஸ்!
என் மீது நம்பிக்கை வைத்து, நான் விரும்பியதைச் செய்ய வாய்ப்பளித்த சிஎஸ்கே நிர்வாத்திற்கு நன்றி என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்விகள் என மொத்தமாக 8 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றிலும் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான நிலையைச் சந்தித்திருந்தலும், இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் ரசிர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னதாக வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத டெவால்ட் பிரீவிஸ் சிஎஸ்கே அணிக்காக மாற்று வீரராக ஒப்பந்தமாகி 6 போட்டிகளில் 180 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 225 ரன்களைக் குவித்து அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறிவுள்ளார். இந்நிலையில் அவர் சிஎஸ்கே அணிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் மீது நம்பிக்கை வைத்து, நான் விரும்பியதைச் செய்ய வாய்ப்பளித்த சென்னை நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. முதல் நாளிலிருந்தே எனக்கு ஆதரவளித்த என் அணி வீரர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி. இந்தியாவில் உள்ள எங்கள் நம்பமுடியாத ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. சேப்பாக்கத்தில் இருந்த சூழ்நிலையும் ஆதரவும் என்னால் மறக்க முடியாதவை. விரைவில் திரும்பி வருவேன் என்று நம்புகிறேன்” என்று கூறிவுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
மேலும் அவர் தனது பதிவுடன் சேர்த்து மகேந்திர சிங் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இந்நிலையில் டெவால்ட் பிரீவிஸின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்த மிகப்பெரும் நன்மையாக டெவால்ட் பிரீவிஸ் இருந்துள்ளார். இதனால் எதிர்வரும் சீசன்களில் அவர் அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now