
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகள் தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக இந்த மூன்று அணிகளும் இதுவறைய விளையாடியுள்ள 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கின்றனர். இதனால் இந்த அணிகளின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ள. குறிப்பாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி சில போட்டிகளாகவே குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வருவது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் அடுத்தடுத்து தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதன் காரணமாக இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே தரப்பில் இருந்து முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.