Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2025: அணிகள் தக்கவைத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை குறித்த முழு பட்டியல்!

எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காணலாம்.

Advertisement
ஐபிஎல் 2025: அணிகள் தக்கவைத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை குறித்த முழு பட்டியல்!
ஐபிஎல் 2025: அணிகள் தக்கவைத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை குறித்த முழு பட்டியல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 01, 2024 • 11:27 AM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 01, 2024 • 11:27 AM

இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. சென்னை, லக்னோ, குஜராத், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் குறித்த முழு பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.

Trending

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தேர்வு செய்துள்ளது. அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. 

மீதமுள்ள ஏல தொகை : ரூ.55 கோடி

பஞ்சாப் கிங்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாத அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இம்முறை புதிய யுக்தியை பின் தொடரும் வகையில் இரு இளம் வீரர்களை மட்டும் தக்கவைத்து மற்ற அனைவரையும் விடுவித்துள்ளது. அதன்படி ஷஷாங்க் சிங்கை ரூ.5.5 கோடிக்கும், பிரப்ஷிம்ரன் சிங்கை ரூ.4 கோடிக்கும் என தக்கவைத்துள்ளது. இதன்மூலம் எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரூ.110.50 கோடியுடன், அதிக ஏல தொகை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ. 21 கோடிக்கும், ராஜத் பட்டிதார் ரூ.11 கோடிக்கும், யாஷ் தயாள் ரூ. 5 கோடிக்கும் என ஆர்சிபி அணி தக்கவைத்துள்ளது. அதேசமயம் அந்த அணி முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல், வில் ஜேக்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மீதமுள்ள ஏல தொகை: ரூ. 83 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி கேகேஆர் அணி ரிங்கு சிங்கை 13 கோடிக்கும், வருண் சக்ரவர்த்தியை 12 கோடிக்கும், ஹர்ஷித் ரானா மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரை தலா ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ள நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரை தலா ரூ.12 கோடிக்கு தக்கவைத்துள்ளது.

மீதமுள்ள ஏல தொகைள் ரூ. 51 கோடி

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மற்றொரு அணியான மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை அதிகபட்சமாக ரூ,18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. மேற்கொண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ரூ.16.35 கோடிக்கு தக்கவைத்திருக்கும் நிலையில், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை ரூ.16 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இதுதவிர்த்து திலக் வர்மா ரூ.8 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். 

மீதமுள்ள ஏலத் தொகை: ரூ. 45 கோடி

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

கடந்த் ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இம்முறை 5 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசெனை ரூ.23 கோடிக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர் எனும் பெருமையை கிளாசென் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.18 கோடிக்கும், அபிஷேக் சர்மாவை ரூ.14 கோடிக்கும், டிராவிஸ் ஹெட்டை ரூ.14 கோடிக்கும், நிதீஷ் ரெட்டையை ரூ. 16 கோடிக்கும் தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. 

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ.45 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கடந்த ஐபிஎல் தொடரில் அணிக்குள்ளேயே பல்வேறு குழப்பத்தை சந்தித்த அணி என்றால் அது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தான். ஏனெனில் கேப்டன் உரிமையாளருக்கு இடையேயன பிரச்சனையை பொதுவெளியில் நடத்தியதன் காரணமாக அந்த அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் தற்சமயம் அந்த அணி நிர்வாகம் அணியின் கேப்டனை வெளியேற்றியுள்ள நிலையில், 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, நிக்கோலஸ் பூரனை ரூ.21 கோடிக்கும், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவை ரூ.11 கோடிக்கும், மொஹ்சின் கான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோரை தலா ரூ.4 கோடிக்குக்கும் தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. 

மீதமுள்ள ஏல தொகை: ரூ.69 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தொடகக் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரூ.18 கோடிக்கு தக்கவைப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதவிர்த்து ஆல் ரவுண்டர் ரியான் பராக்கை ரூ.14 கோடிக்கும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலை ரூ.11 கோடிக்கும், ஷிம்ரான் ஹெட்மையரை ரூ.11 கோடிக்கும் தக்கவைத்துள்ள அந்த அணி, அன்கேப்ட் வீரராக சந்தீப் சர்மாவை ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. இதனால் எதிர்வரும் மெகா ஏலத்தில் அந்த அணி மிகக்குறைந்த தொகையுடன் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மீதமுள்ள ஏல தொகை: ரூ.41 கோடி

குஜராத் டைட்டன்ஸ்

முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்து. இதில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை அதிகபட்சமாக ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லை ரூ.16.50 கோடிக்கும், சாய் சுதர்ஷனை ரூ.8.50 கோடிக்கும், ராகுல் திவேத்தியா மற்றும் ஷாருக் கான் ஆகியோரைத் தலா ரூ.4 கோடிக்கும் என குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை அந்த அணி விடுவிடுதுள்ளது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. 

மீதமுள்ள ஏல தொகை: ரூ.69 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐபிஎல் தொடர் வரலாற்றில் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறும் அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அந்த அணி நிர்வாகம் சமீபத்தில் அணியின் பயிற்சியாளரை மாற்றிய நிலையில், தற்போது அணியின் கேப்டனை தக்கவைக்காமால் விடுவித்துள்ளது. அந்தவகையில் அந்த அணி தற்சமய 4 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அக்ஸர் படேலை ரூ.16.50 கோடிக்கும், குல்தீப் யாதவை ரூ.13.25 கோடிக்கும் தக்கவைத்துள்ள நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸை ரூ.10 கோடிக்கும், ஆபிஷேக் போரலை ரூ. 4 கோடிக்கும் என தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மீதமுள்ள ஏல தொகை: ரூ. 73 கோடி

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement