
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் நடத்திர வீரர் கிளென் பிலீப்ஸ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது கிளென் பிலீப்ஸ் காயத்தை சந்தித்திருந்தார். இதனால் அவர் மைதானத்தில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினர்.