
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இந்நிலையில் தன்னை ஒரு ஆல் ரவுண்டராகவே கருதுகிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் இளம் வீரர் விப்ராஜ் நிகாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விப்ராஜ், “நான் எப்போது என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன். தேவைப்படும் போதெல்லாம் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும். மேலும் இந்தொடரின் அனைத்து போட்டிகளுமே அழுத்தமும் பதட்டமும் நிறைந்த போட்டியாக இருக்கும்.