
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இதுவரை 7 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்துள்ளன.
இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இத்தொடரில் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு எதிரான போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின
ஏனெனில் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக கொல்கத்தா காவல்துறை அனுமதியை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு மேற்கு வங்கத்தில் கொண்டாடத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்து பணியில் காவல்துறை ஈடுபட இருப்பதன் காரணமாக, ஐபிஎல் போட்டிக்கான பாதுக்காப்பை வழங்க இயலாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சினேகாஷிஷ் கங்குலியும் உறுதி செய்திருந்தார்.