
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன் பேசிய கேகேஆர் அணி வீரர் ஹர்ஷித் ரானா, “அணியில் உள்ள அனைத்து ஊழியர்களும் அடிப்படையில் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள், அபிஷேக் நாயர் கூட திரும்பி வந்துவிட்டார். ஆனால் ஆம், கம்பீர் இல்லாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது. வேறு யாருக்காகவும் இதனை நான் கூறவில்லை, எனக்காக மட்டுமே நான் பேசுகிறேன். நான் தனிப்பட்ட எதையும் பற்றிப் பேசவில்லை.