
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டி முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேகேஆர் அணியின் துணைக்கேப்டன் வெங்கடேஷ் ஐயர், “கடைசி ஆட்டத்தில் கூட நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். இறுதில் நாங்கள் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றோம், அது ஒரு சமமான ஆட்டமாக இருந்தது. அதனால் எங்களுக்கு எது சிறந்த சூழ்நிலை என்று நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. கிரிக்கெட்டின் நல்ல சூழ்நிலைகளுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்கிறோம்.