
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் பிளே ஆஃப் சுற்றை நெருங்கிவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலாஞ்சர்ச் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறிவுள்ளன. இருப்பினும் இதில் எந்த இரு அணிகள் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதற்கேற்றவகையில் நாளை நடைபெறும் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லாக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானி இணைந்துள்ளார். ஏனெனில் சர்வதேச போட்டிகள் காரணமாக ஆர்சிபி அணியில் இடம்பிடித்திருந்த ஜேக்கப் பெத்தெல் மற்றும் லுங்கி இங்கிடி இருவரும் தாயகம் திரும்பவுள்ளதான் காரணமாக, தற்காலிக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் முஸரபானி அணியில் இணைந்துள்ளார்.