டிராவிஸ் ஹெட்டை க்ளீன் போல்டாக்கிய பிரின்ஸ் யாதவ் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - நிதீஷ் ரெட்டி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசிய நிலையில் அந்த ஓவரின் 3ஆவது பந்தை டிரேவிஸ் ஹெட் பந்துவீச்சாளர் தலைக்கு மேல் பவுண்டரி அடிக்கும் முனைப்பில் தூக்கி அடிக்க முயற்சித்து பந்தை தவறவிட, அது நேரடியாக ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தை பதிவுசெய்ய முடியாமல் பெவிலியன் திரும்பினார்.
You miss, I hit
Prince Yadav gets the huge wicket of Travis Head as his maiden #TATAIPL dismissal
Updates https://t.co/X6vyVEuZH1#SRHvLSG | @LucknowIPL pic.twitter.com/VT3yLLlN9J— IndianPremierLeague (@IPL) March 27, 2025சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
இம்பாக்ட் வீரர்கள்: சச்சின் பேபி, ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, ஆடம் ஜாம்பா, வியான் முல்டர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடும் லெவன்: ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், அப்துல் சமத், டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்.
Also Read: Funding To Save Test Cricket
இம்பாக்ட் வீரர்கள்: ஷாபாஸ், மணிமாறன் சித்தார்த், மிட்செல் மார்ஷ், ஹிம்மத் சிங், ஆகாஷ் மகாராஜ் சிங்
Win Big, Make Your Cricket Tales Now