ஐபிஎல் 2025: இம்பேக்ட் பிளேயராக விளையாடும் சஞ்சு; ராயல்ஸ் கேப்டனாக ரியான் பராக் நியமனம்!
ஐபிஎல் 18ஆவது சீசனின் முதல் மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் பேட்டராக மட்டுமே விளையாடுவார் என்றும், இதனால் அணியின் கேப்டனாக ரியான் பராக செயல்படுவார் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் காயத்தில் இருந்து மீண்டு பயிர்சியில் ஈடுபட்டு வருகிரார்.
Trending
முன்னதாக இங்கிலாந்து டி20 தொடரின் போது விரலில் காயத்தை சந்தித்திருந்த சஞ்சு சாம்சன் அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் ரஞ்சி கோப்பை போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் துறைகளில் தனது உடற்தகுதியை எட்டினார். இதனையடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை பிசிசிஐ வழங்கியது.
இதனையடுத்து அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இருப்பினும் அவர் முதல் சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் பேட்டராக மட்டுமே விளையாடவுள்ளார் என்றும், இதன் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: Sanju will be playing our first three games as a batter, with Riyan stepping up to lead the boys in these matches! pic.twitter.com/FyHTmBp1F5
— Rajasthan Royals (@rajasthanroyals) March 20, 2025இதனால் சஞ்சு சாம்சன் மூன்று போட்டிகளிலும் இம்பேக்ட் வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளார். மேற்கொண்டு அவர் அணியில் இல்லாத சமயத்தில் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரால்ஸ் அணி மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.
Win Big, Make Your Cricket Tales Now