
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறு வாய்ப்பையும் ஏறத்தாழ நழுவவிட்டுள்ளது.
ஏனெனில் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் அந்த அணி சிறப்பான ரன் ரேட்டில் வெற்றிபெறுவது அவசியம் என்பதால் அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டன் சஞ்சு சாம்சன் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியின் சஞ்சு சாம்சன் காயமடைந்ததுடன், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை.