ஐபிஎல் 2025: பிரைடன் கார்ஸ் விலகல்; மாற்று வீரரை தேர்வு செய்தது எஸ்ஆர்எச்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து பிரைடன் கார்ஸ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில் மார்ச் 22ஆம் தேதி தொடங்கு முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
அதனைத்தொடர்ந்து கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்கள் தங்கள் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பிரைடன் கார்ஸ் காயம் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பிரைடன் கார்ஸை ரூ.1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் கார்ஸ் தொடரில் இருந்து விலகியாதை அடுத்து அவருக்கான மாற்று வீரரை தேடும் முயற்சியில் அந்த அணி இறங்கியது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் வியான் முல்டரை அவரின் ஆராம்ப விலையான ரூ.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 11 டி20, 18 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வியான் முல்டர் 60 விக்கெட்டுகளையும், 970 ரன்களை அடித்துள்ளார். இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்சல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், வியான் முல்டர்*, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.
Win Big, Make Your Cricket Tales Now