விக்கெட் கணிக்க முடியாததாக உள்ளது - பெங்களூரு மைதானம் குறித்து ரஜத் பட்டிதார்!
எங்கள் சொந்த மைதானப் போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் இதுவரை வெற்றியைப் பெறமுடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் இப்போட்டியில் வெற்றி பெற்று சொந்த மைதானத்தில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்யுமான என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “எங்கள் சொந்த மைதானப் போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை, நீங்கள் டாஸ் பற்றிப் பேசுகிறீர்கள், அது என் கையில் இல்லை. மேலும் இந்த முறை இங்குள்ள விக்கெட்டுகள் கொஞ்சம் தந்திரமாகவும் மற்றும் கணிக்க முடியாததாகவும் உள்ளது. ஆனால் அது ஒரு சாக்குப்போக்கு அல்ல. எனவே, சூழ்நிலை மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரைவில் எங்களை மாற்றியமைக்க முயற்சிப்போம்.
மேலும் டாஸ் இழந்ததால் தான் நாங்கள் பாதி போட்டியில் தோல்வியைத் தழுவினோம் என்று கூறுவது அர்த்தமற்றது. ஆனால் ஒரு வீரராக, நீங்கள் முதலில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தால், அத்தகைய சூழ்நிலையிலும் உங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்ய எப்போதும் முயற்சிப்பீர்கள். எனவே, நாங்கள் டாஸில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, எங்களுடைய பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now