சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய கையுடனும், ஆர்சிபி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கையுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டியில் விளையாடவுள்ள இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியது. அணியின் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். அவர்களுடன் ஷிவம் தூபே, ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா உள்ளிட்டோரும் சோபிக்கும் பட்சத்தில் அது எதிரணிக்கு கடும் சவாலாக அமையும்.
அணியின் பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் கலீல் அஹ்மத் அற்புதமான ஃபார்மில் உள்ளார். அவர்களுடன் சென்னை மைதானத்திற்கு ஏற்ப பந்துவீச கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் அணியின் பலமாக பார்க்கப்படுகின்றனர். இதுவிர்த்து கடந்த போட்டியில் லெவனில் இடம்பிடிக்காத மதீஷா பதிரானா இப்போட்டிக்கான லெவனில் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திர, ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராதன் படிதர் தலைமையிலான ஆர்சிபி அணியும் கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியிலேயே அணியின் நட்சத்திர வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர். மேற்கொண்டு ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட் போன்ற அதிரடியான வீரர்களும் அணியில் இருப்பது அணிக்கு பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பந்துவீச்சு துறையில் ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ராஷிக் சலாம் உள்ளிட்டார் வேகப்பந்து வீச்சில் அணிக்கு கைகொடுக்கும் நிலையியில், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்டோ சுழற்பந்துவீச்சில் உதவுகின்றனர். இவர்களுடன் புவனேஷ்வர் குமாரும் லெவனில் இடம்பெறும் பட்சத்தில் அந்த அணியின் பந்துவீச்சு துறை மேலும் வலிமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்ணால் பாண்டியா, ராசிக் சலாம், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 33
- சென்னை சூப்பர் கிங்ஸ் – 21
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 11
- முடிவில்லை - 01
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரஜத் படிதர், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, குர்ணால் பாண்டியா
- பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், கலீல் அகமது, நூர் அகமது.
Win Big, Make Your Cricket Tales Now