டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Trending
டெல்லி கேப்பிட்டல்ஸ்
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த போட்டியில் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் அஷுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணியின் டாப் ஆர்டரும் சிறப்பாக செயல்படும் நிலையில் அந்த நி கூடுதல் வலிமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு கேஎல் ராகுலும் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்பதால் அது அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா உள்ளிட்டோருடன் இன்றைய ஆட்டத்தில் நடராஜனும் விளையாடுவார் என்பதால் அது அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும். ஏற்கெனவே அந்த அணி முதல் போட்டியை வென்றுள்ள காரணத்தால் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பெறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், கேஎல் ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், மோஹித் சர்மா/நடராஜன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தி நடப்பு சீசனை வெற்றிகரமாக தொடங்கிய நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்தது. அதிலும் இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென் உள்ளிட்டோர் பெரிதளவி ரன்களைச் சேர்க்க தவறியதே தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிராவிஸ் ஹெட், அனிகேத் வர்மா உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு நம்பிக்கையளிக்கிறது.
மறுபக்கம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் அந்த அணி சற்று பலவீனமாகவே உள்ளது. பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், சீமர்ஜித் சிங் உள்ளிட்டோர் இருந்தாலும், சுழற்பந்து வீச்சில் அந்த அணி ஆடம் ஸாம்பாவை மட்டுமே நம்பியுள்ளது. மேற்கொண்டு கடந்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சவால்களை சமாளித்த அந்த அணி சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, சிமர்ஜீத் சிங்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிக்கள் – 24
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 13
- டெல்லி கேபிடல்ஸ் - 11
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
- பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அசுதோஷ் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி
- பந்து வீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now