குஜராஜ் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொஅட்ரில் இரு அணிகளும் தோல்வியைச் சந்தித்த பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Trending
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி இருந்தது. இதனால் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரில் சாய் சுதர்ஷ்சன், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் மற்ற வீரர்களும் ரன்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க குஜராத் அணியின் பந்து வீச்சு பலவீனமாக காணப்படுகிறது. ஏனெனில் முதல் ஆட்டத்திலேயே முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, காகிசோ ரபாடா மற்றும் ரஷித் கான் என அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ராகுல் திவேத்தியா, ஷாருக் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரஷீத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அப்போட்டியில் அந்த அணியின் பேட்டிங் பெரிதளவில் எடுபடவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர். இதனா ஆவர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். அதேசமயம் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடவுள்ளது அணிக்கு சாதகத்தை வழங்கலாம்.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் அறிமுக வீரர் விக்னேஷ் புதூர் முதல் ஆட்டத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கொண்டு டிரென்ட் போல்ட், தீபக் சஹார் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் கைக்கொடுத்தாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சு துறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய நிலையில் மும்பை அணி உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்களின் லெவன் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், சத்யநாராயண் ராஜு.
நேருக்கு நேர்
- மொத்தம் - 05
- குஜராத் டைட்டன்ஸ் - 03
- மும்பை இந்தியன்ஸ் – 02
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், ரியான் ரிக்கல்டன்
- பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், திலக் வர்மா, சாய் சுதர்சன் (துணை கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்டியா (கேப்டன்), வில் ஜாக்ஸ்
- பந்து வீச்சாளர்கள் - தீபக் சாஹர், ரஷீத் கான்.
Win Big, Make Your Cricket Tales Now