மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்,இப் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
மும்பை இந்தியன்ஸ்
அடுத்தடுத்து தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், ரோஹித் சர்மா ரியான் ரிக்கெல்டன், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சொதப்புவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர்களும் பேட்டிங்கில் சோபிக்கும் பட்சத்தில் அந்த அணி வலிமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் பந்துவீச்சை பொறுத்த மட்டில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் டிரென்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சஹார் உள்ளிட்டோர் அணிக்கு சமநிலையை கொடுக்கின்றனர். அவர்களுடன் மிட்செல் சான்ட்னர், விக்னோஷ் புதூர் உள்ளிட்டோரும் சுழற்பந்து வீச்சில் அணிக்கு நம்பிக்கை அளிப்பதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், விக்னேஷ் புதூர், அஸ்வனி குமார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
முதல் போட்டியில் தோல்வியை தழுவிய கேகேஆர் அணி அடுத்த போட்டியில் அபாரமான வெற்றியைப் பெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் குயின்டன் டி காக் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவருடன் அஜிங்கியா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் போன்ற வீரர்களும் இருப்பது அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கிறது.
மறுபக்கம் பந்துவீச்சில் ஹர்ஷித் ரானா, வைபவ் சூர்யவன்ஷி, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் உள்ளிட்டோர் தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஸ்பென்சர் ஜான்சன் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கியுள்ளதன் காரணமாக, இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதில் ஆன்ட்ரி நோர்ட்ஜே இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 34
- மும்பை இந்தியன்ஸ் – 23
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 11
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), துருவ் ஜூரெல்
- பேட்ஸ்மேன்கள் - ரச்சின் ரவீந்திரா, ரிதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், வனிந்து ஹசரங்கா, ரியான் பராக்
- பந்து வீச்சாளர்கள் - நூர் அகமது (துணை கேப்டன்), மதிஷா பதிரானா
Win Big, Make Your Cricket Tales Now