ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் மொத்தம் 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அனைத்து போட்டிகளுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதுடன் நல்ல விருந்தாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும், கேகேஆர் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் என இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
Trending
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் விளையாடவுள்ள இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரியான் பராக் தலைமையில் முதல் போட்டியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராய்ல்ஸ் இறுதிவரை போராடிய நிலையிலும் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. இதில் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ஷுபம் தூபே உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபக்கம் பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் கடந்த போட்டியில் துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்க்ஷனா, சந்தீப் சர்மா உள்ளிட்டோர் ஓரளவு ரன்களைக் கட்டுப்படுத்தினாலும் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் ரன்களை வாரி வழங்கியுள்ளது தற்போது பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வநிந்து ஹசரங்கா, குமார் கார்த்திகேயா அல்லது குவேனா மபாகா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ஷுபம் துபே, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி. சஞ்சு சாம்சன் (இம்பேக்ட்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அஜிங்கியா ரஹானே தலைமையிலான நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அந்த அணி வீரர்களும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதில் அஜிங்கியா ரஹானே, சுனில் நரைன் உள்ளிட்டோரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி ரன்களைக் கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார். அவருடன் சுனில் நரைன், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் சாதக்கத்தை வழங்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: சுனில் நரைன், குயின்டன் டி காக், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சன் ஜான்சன்/ஆன்ரிச் நோட்ர்ட்ஜே, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி. அங்கிரிஷ் ரகுவன்ஷி (இம்பேக்ட்)
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 30
- ராஜஸ்தான் ராயல்ஸ் – 14
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 14
- முடிவில்லை - 02
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), துருவ் ஜூரெல்
- பேட்ஸ்மேன்கள் - அஜிங்கியா ரஹானே, ஷிம்ரான் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கிரிஷ் ரகுவன்ஷி
- ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல்
- பந்து வீச்சாளர்கள் - துஷார் தேஷ்பாண்டே, வருண் சக்ரவர்த்தி, மகேஷ் தீக்ஷனா.
Win Big, Make Your Cricket Tales Now