
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இதில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள மைதானம் அதிக ஸ்கோரை அடிக்க சாதகமான மைதான என்பதால் நிச்சயம் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணியின் உத்தேச லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.